திருப்பதியில் ரதஉற்வச விழா கோலாகலம் : தேரில் வீதிஉலா வந்த மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தின் 8-ஆம் நாளான இன்று ரத உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

Update: 2019-10-07 05:18 GMT
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தின் 8-ஆம் நாளான இன்று ரத உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக, பிரம்மோற்சவ திருவிழாவின் ஏழாம் நாளான நேற்று மலையப்பசாமி சந்திர பிரபை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஸ்ரீ கிருஷ்ணர் அலங்காரத்தில் நான்கு மாடவீதியில் உலா வந்தபோது, பக்தர்கள் கோலட்டம், தப்பட்டம் மற்றும் பஜனைகள் பாடியபடி அணிவகுத்து சென்றனர். இதை தொடர்ந்து ஊஞ்சல் சேவை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர், சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

பிரம்மோற்சவத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.தொடர் விடுமுறை காரணமாக அதிகளவில் பக்தர்கள் திருப்பதிக்கு வருவதால் இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் 24 மணி நேரம் காத்திக்க வேண்டியிருந்தது. தசரா விடுமுறை, ஆயுத பூஜை என்பதால் பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர். திவ்ய தரிசனம் வரும் 14ம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் இலவச தரிசனத்தில் மட்டுமே செல்ல முடியும். திருமலையில் நாளை காலை மகா ரதம் எனப்படும் தேரோட்டம் நடைபெற உள்ளதால் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்