உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் சரிவு

நாடு முழுவதும் கலை - அறிவியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதம், கடந்த 5 ஆண்டுகளில் கணிசமாக சரிந்துள்ளது.

Update: 2019-09-24 09:13 GMT
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம், 2018-19 ஆம் ஆண்டின் உயர்கல்வி நிலவரம் குறித்த கணக்கெடுப்பு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. 310 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையில், கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளில், மாணவர் சேர்க்கை விகிதம் கணிசமாக சரிந்துள்ளது. கடந்த 2014-15 ஆம் ஆண்டு, பி.இ. - பி.டெக். படிப்புகளில், நாடு முழுவதும் 42 லட்சத்து, 54 ஆயிரத்து 919 மாணவர்கள் சேர்ந்தனர். இதுவே, கடந்த 2018-19 ஆம் கல்வியாண்டில் 37 லட்சத்து 70 ஆயிரத்து 949 ஆக குறைந்துள்ளது. கலை, அறிவியல் கல்லுாரிகளில், இதே கால கட்டங்களில், 98 லட்சத்து 69 ஆயிரத்து 520 ஆக இருந்த மாணவர்கள் சேர்க்கை, 91 லட்சத்து 98 ஆயிரத்து 205 ஆக குறைந்துள்ளது.

பொறியியல் கல்லுாரிகளில் மாணவ சேர்க்கை விகிதம், 71 புள்ளி ஒ​ரு விழுக்காடாகவும், மாணவிகளின் பங்கு 28 புள்ளி ஒன்பது விழுக்காடாகவும் இருக்கிறது.
முதுகலை பட்டப்படிப்பிற்குப் பின், 19 புள்ளி நான்கு  விழுக்காடு மாணவர்கள் மட்டுமே ஆய்வு படிப்பிற்கு செல்கின்றனர் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 தற்போதைய ஆய்வறிக்கையின் படி, தேசிய அளவில் உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் அளவு 26 புள்ளி மூன்று, விழுக்காடாக இருக்கிறது. இவர்கள் அனைவரும் 18 முதல் 23 வயதிற்கு உட்பட்டவர்கள். உத்தரபிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் மாணவிகள் அதிகளவில் உயர்கல்விக்கு செல்வதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.சி. - பி.காம். படிப்புகளுக்கு பிறகு பி.ஏ., பட்டப்படிப்பை மாணவர்கள் தேர்வு செய்வதாகவும் தெரிய வந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்