டெல்லியில் போக்குவரத்து விதிமீறலுக்கு ரூ. 2,00,500 அபராதம்
டெல்லியில் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 2 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக, 2 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின்படி, அதிக பாரம் ஏற்றியதற்காக 56 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பதிவு சான்று மற்றும் , தகுதி சான்று இல்லாததற்கு தலா பத்தாயிரம் ரூபாய், ஓட்டுனர் உரிமம் இல்லாததற்கு ஐயாயிரம் ரூபாய், எஃப்.சி., காப்பீடு, மாசு கட்டுப்பாடு சான்றிதழ், சீட் பெல்ட் அணியாமை என பல்வேறு குற்றங்களுக்காக 2 லட்சத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநருக்கு விதக்கப்பட்ட இந்த அபராதத் தொகை, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.