ராஜஸ்தான் லாரி உரிமையாளருக்கு ரூ.1,41,700 அபராதம் : அபராதம் விதிப்பதில் ஒடிசா, டெல்லி இடையே கடும் போட்டி
பெட்ரோல் மற்றும் டீசலுக்கு அதிக வரி விதித்து வருவாயை பெருக்கி வந்த மாநில அரசுகள், தற்போது புதிய மோட்டார் வாகன சட்டத்தை பயன்படுத்தி அதிக வருவாய் ஈட்டி வருவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
பெட்ரோல் மற்றும் டீசலுக்கு அதிக வரி விதித்து வருவாயை பெருக்கி வந்த மாநில அரசுகள், தற்போது புதிய மோட்டார் வாகன சட்டத்தை பயன்படுத்தி அதிக வருவாய் ஈட்டி வருவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். கடந்த 5 ஆம் தேதி ராஜஸ்தானை சேர்ந்த சரக்கு வாகனம் அதிக பாரம் ஏற்றி வந்ததாக கூறி டெல்லி போலீசார் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 700 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இந்த தொகையை அவர் கடந்த 9 ஆம் தேதி ரோகினி நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளார். மோட்டார் வாகன சட்டப்படி அதிக அபராதம் விதிப்பதில் டெல்லி மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.