ஹரியானா : வாகனத்தின் விலை ரூ.15 ஆயிரம் அபராதம் ரூ.23,000
புதிய மோட்டார் வாகன சட்டம் நாடுமுழுவதும் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஹரியானா மாநிலத்தில் வாகன ஓட்டிகள் இரண்டு பேருக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
புதிய மோட்டார் வாகன சட்டம் நாடுமுழுவதும் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஹரியானா மாநிலத்தில் வாகன ஓட்டிகள் இரண்டு பேருக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம், குர்கானை சேர்ந்த சேர்ந்த அமீத் என்பருக்கு போக்குவரத்து போலீசார் 24 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். அதேபோல், குருக்ராமை சேர்ந்த தினேஷ் மதன் என்பவர், எந்த வித ஆவணங்களும் இன்றி வாகனம் ஓட்டியது உள்ளிட்ட காரணங்களுக்காக, அவருக்கு 23 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வாகனத்தின் விலையே
15 ஆயிரம் ரூபாய்தான் எனவும், ஆனால் 23 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தினேஷ் மதன் தெரிவித்துள்ளார்.