காணமுடியாத கரன்சியின் கண்கவர் வித்தை
மெய்நிகர் கரன்சி எனப்படும், கிரிப்டோகரன்சிகள் மீதான நம்கத்தன்மை சர்வதேச அளவில் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
மெய்நிகர் கரன்சி எனப்படும், கிரிப்டோகரன்சிகளை பணம், கடன் அட்டைகள், காசோலைகளுக்கு பதிலாக பயன்படுத்த முடியும். பரிவர்த்தனைகளின் போது தகவல்களை சரிபார்க்கவும், பாதுகாக்கவும், உயர்தர பாதுகாப்பு அம்சம் கொண்ட கணினி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. விர்ச்சுவல் கரன்சி என்கிற கிரிப்டோகரன்சிகள் மீதான நம்கத்தன்மை சர்வதேச அளவில் அதிகரித்து வருவதாக கூறப்டுகிறது. கிரிப்டோகரன்சிகளில் பிட்காயின், Ethereum, Litecoin, பினான்ஸ் காயின், மொரினோ ஆகியவை பிரபலமடைந்து வருகிறது. அதில் முதல் இடத்தில் உள்ள பிட்காயின் என்பது கண்ணில் பார்க்க முடியாத அனைத்து நாடுகளுக்கும் பொதுவான பணம். இணையத்தில் மட்டுமே பரிமாறப்படும் இதை வைத்துக் கொண்டு ஆன்லைனில் ஷாப்பிங் செய்யலாம்.
டாலர், பவுண்ட், ரூபாய் என்று இல்லாமல் உலகத்திற்கே ஒரே நாணயமாக பிட்காயின் உள்ளது. பிட்காயின் ஒரு டிஜிட்டல் கரன்சி என்றும் கூறப்படுகிறது. இந்த பிட்காயினை வைத்துக் கொள்ள இணையதளத்தில் ஒரு கணக்கு உருவாக்கி கொள்ளலாம் . இந்த இணையதளம் அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது. 2009ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிட்காயின் என்ற முதல் கிரிப்டோ கரன்சி, முதலில் இலவசமாக தொடங்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு 22 காசுகளாக இருந்த பிட்காயின் மதிப்பு தற்போது, 7 லட்சத்து 34 ஆயிரத்து 890 ரூபாயாக உள்ளது. தங்க உற்பத்தி ஆண்டுக்கு ஒன்று புள்ளி 7 சதவீதம் அதிகரித்து வரும் நிலையில், பிட்காயின் ஆண்டுக்கு 3 புள்ளி 69 சதவீதம் உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பல நாடுகள் பிட் காயின்களை உருவாக்கி வெளியிட திட்டமிட்டுள்ளது.
2010 ஆண்டு இரண்டு பீசாகள் 10,000 ஆயிரம் பிட்காயின்கள் கொண்டு வாங்கப்பட்டது தான், பிட் காயின் மூலம் முதன் முதலில் நடந்த பரிவர்த்தனை ஆகும். அதன் பிறகு 2017ஆம் ஆண்டு ஒரு பிட்காயின் 14 லட்சத்து 20 ஆயிரத்து 236 ரூபாயாக இருந்தது. பிட்காயின்களை பொருட்களை வாங்க பயன்படுத்த முடிந்தாலும் அமெரிக்க வருமானவரித்துறை போன்ற அமைப்புகள் இதனை ஒரு சொத்தாக கருதுகின்றன. அமெரிக்காவில் தான் சர்வதேச அளவில் அதிக பிட்காயின் ஏடிஎம்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கிரிப்டோ கரன்சிகள் மீது மொத்தமாக தடை எதுவும் விதிக்கப்படவில்லை என்று மத்திய அரசு கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி கிரிப்டோ கரன்சிகளை கையாளும் வங்கிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பயங்கர வாதிகள் பிட்காயின் மூலம் பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டும் போக்கு அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், சர்வதேச பொருளாதாரத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் சக்தி பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகளுக்கே உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.