" ஆரோக்கிய இந்தியா " : பிரதமர் நரேந்திரமோடி சூளுரை
ஆரோக்கிய இந்தியாவே, மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியின் லட்சியம் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
ஆரோக்கிய இந்தியாவே, மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியின் லட்சியம் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். பிட் இந்தியா இயக்கத்தை துவக்கி வைத்த, பிரதமர் மோடி, அன்றாட வாழ்வில் உடற்பயிற்சி மிகவும் அவசியம் என இளைஞர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, தலைநகர் புதுடெல்லியில் உள்ள இந்திராகாந்தி ஸ்டேடியத்தில்,பிட் இந்தியா இயக்க துவக்க விழா நடைபெற்றது. பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு, பிட் இந்தியா இயக்கத்தை துவக்கி வைத்து, கண்கவர் கலை நிகழ்ச்சிகளை ரசித்து பார்த்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, உடற்பயிற்சி என்பது, விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமல்ல - அனைவருக்குமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். அன்றாட வாழ்வில், உடற்பயிற்சி செய்வது அவசியம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். மக்கள் ஆரோக்கியத்துடன் இருப்பது, நாட்டின் வலிமைக்கும், வளர்ச்சிக்கும் மிகவும் இன்றியமையாதது என சுட்டிக்காட்டிய அவர், ஆரோக்கிய இந்தியாவே தமது லட்சியம் என்றார். இதே நாளில் பிறந்த ஹாக்கி வீரர் தயான் சந்த், உடற் தகுதி மூலம், உலகை ஆச்சரியப்படுத்தினார் என பிரதமர் நரேந்திரமோடி நினைவு கூர்ந்தார். இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள், பாஜக நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.