காஷ்மீர் விவகாரத்தில் 3 - வது நாடு தலையிட அனுமதியில்லை - பிரதமர் மோடி

காஷ்மீர் விவகாரத்தில் 3 - வது நாடு தலையிட அனுமதிக்க மாட்டோம் என பிரதமர் மோடி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Update: 2019-08-26 13:11 GMT
ஃபிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஜி - 7 மாநாட்டில், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப்பை சந்தித்தார், பிரதமர் நரேந்திரமோடி சந்தித்து பேசினார். பேச்சுவார்த்தையின் போது, இந்தியா - அமெரிக்கா இடையேயான நல்லுறவு குறித்து, முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காஷ்மீர் விவகாரத்தில், 3 வது நாடு தலையிட அனுமதிக்க மாட்டோம் என, கூறினார். இதனை தொடர்ந்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா பாகிஸ்தான் நாடுகளிடையேயான பிரச்சனையை, இரு நாடுகளுமே பேசி தீர்த்துக்கொள்ளும் என்றார்.
Tags:    

மேலும் செய்திகள்