காஷ்மீர் எல்லையில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்:"உயிர்சேதத்தை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்" - தலைமை செயலாளர் சுப்ரமணியம் உறுதி
காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்கு பாகிஸ்தான் திட்டமிட்டு உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்து உள்ளது.
ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பின்னர் எல்லைப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் அதிகளவிலான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைப் பகுதிகளில் அத்துமீறி தாக்கும் சம்பவம் தீவிரமடைந்துள்ளதாகவும், பாகிஸ்தானின் ராணுவ உதவியுடன் தீவிரவாதிகள், ஊடுருவி வருவதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய, ஜம்மு காஷ்மீர் மாநில தலைமை செயலாளர் சுப்ரமணியன், அமைதியை நிலை நாட்டும் நடவடிக்கையில் ஒருவருக்கு கூட, உயிர்ச்சேதம், காயம் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளதாக கூறினார்.