சாதாரண புகைப்படத்தை நிர்வாணமாக மாற்றும் செயலி - பெண்களுக்கு ஓர் அபாய எச்சரிக்கை

சாதாரண புகைப்படத்தை நொடியில் நிர்வாண புகைப்படமாக மாற்றும் அபாயகரமான செயலி ஒன்று இணையதளங்களில் உலா வருவதாக இணையதள நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2019-06-30 12:21 GMT
சாதாரண  புகைப்படத்தை முற்றிலும் த‌த்ரூபமாக நிர்வாண புகைப்படமாக மாற்றக்கூடிய இந்த செயலிகளிடம் இருந்து பெண்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி மென்பொறியாளர்களும், இணையதள நிபுணர்களும் அறிவுறுத்துகின்றனர்.இந்த செயலியால், இளம் வயதினர் எளிதாக திசை மாற வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கும் நிபுணர்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கின்றனர்.இந்த நிர்வாண புகைப்படங்களை, ஆபாச இணையதளங்களில் விற்கும் கும்பல் அதன் மூலம் பணம் சம்பாதிப்பதாகவும், கூறுகிறார் இணையதள நிபுணர் ரெக்ஸ் ஆன்டனி.ஆண்டுதோறும் பல மென்பொறியாளர்கள் வேலை இல்லாமல் இருப்பதே இதுபோன்ற சமூக விரோத செயல்களுக்கு காரணம் என்று கூறும் இணையதள நிபுணர் ரெக்ஸ் ஆண்டனி, டிஜிட்டல் உலகின் சக்தி குறித்தும் எச்சரிக்கிறார்.பெற்றோர்கள் நினைத்தால் மட்டுமே இந்த ஆபத்தில் இருந்து தங்களது குழந்தைகளை காப்பாற்ற முடியும் என கூறும் ரெக்ஸ் ஆண்டனி, அவ்வாறு கண்காணிக்காத பட்சத்தில் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் எச்சரித்துள்ளார்.டிஜிட்டல் உலகில் ஏற்படும் இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற பெற்றோர் தங்கள் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும் என்பதே இணையதள நிபுணர்களின் எச்சரிக்கையாகவும், அறிவுரையாகவும் உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்