புனேவில் கடும் மழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 15 பேர் பலி

புனேவில் கடும் மழை காரணமாக அங்கு உள்ள குடியிருப்பு வளாகத்தின் சுற்றுச்சுவர் இடிந்து அதன் பக்கவாட்டில் இருந்த தற்காலிக குடியிருப்புகள் மீது விழுந்ததில் 2 பெண்கள், 4 குழந்தைகள் உள்பட15 பேர் பலியாகினர்.

Update: 2019-06-29 11:44 GMT
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், கடும் மழை காரணமாக அங்கு உள்ள குடியிருப்பு வளாகத்தின் சுற்றுச்சுவர் இடிந்து அதன் பக்கவாட்டில் இருந்த தற்காலிக குடியிருப்புகள் மீது விழுந்ததில் 2 பெண்கள், 4  குழந்தைகள் உள்பட15 பேர் பலியாகினர். இந்த விபத்தில் பலியான அனைவரும் கட்டட பணி தொடர்பாக தற்காலிக குடியிருப்பு அமைத்து அதில் தங்கி இருந்த வெளி மாநில தொழிலாளர்கள் என தெரியவந்துள்ளது. நள்ளிரவு நேரத்தில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர், இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளவர்களை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்