பட்டப்படிப்பு முடித்த சிறுபான்மையின பெண்களுக்கு நிதியுதவி : ரூ.51 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் - மத்திய அரசு

பட்டப்படிப்பை முடித்த சிறுபான்மையின பெண்களுக்கு, உதவி தொகையாக 51 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என, மத்திய அரசு தெரிவித்தது.

Update: 2019-06-27 19:22 GMT
பட்டப்படிப்பை முடித்த சிறுபான்மையின பெண்களுக்கு, உதவி தொகையாக 51 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என, மத்திய அரசு தெரிவித்தது. மவுலானா ஆசாத் கல்வி நிறுவனம் என்ற தன்னாட்சி அமைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், பட்டப்படிப்பை முடித்த சிறுபான்மையின பெண்களுக்கு இந்த நிதியுதவி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் படிப்பை பாதியிலே நிறுத்தப்படுவது தடுக்க முடியும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது. மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் சார்பில் இந்த தகவல் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்