கிர்கிஸ்தான் சென்றார் பிரதமர் மோடி : 19-வது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பு
19-வது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கிர்கிஸ்தான் சென்றார்.
19-வது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கிர்கிஸ்தான் சென்றார். பிஷ்கேக் விமானநிலையம் சென்றடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் சூரான்பே ஜீன்பெகோ வரவேற்றார். ஒத்துழைப்பு மாநாடு இடையே ரஷ்யா மற்றும் சீன அதிபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். அதே நேரத்தில், இந்த மாநாட்டில் பங்கேற்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை பிரதமர் மோடி சந்தித்து பேசும் திட்டம் எதுவுமில்லை என வெளியுறவுத்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வான்வழியை தவிர்த்து, ஓமன், ஈரான் நாடுகளின் வான் வழியாக பிரதமர் மோடி கிர்கிஸ்தான் சென்றடைந்தார்.