19-வது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு - கிர்கிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி
19-வது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கிர்கிஸ்தான் புறப்பட்டார்.
19-வது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கிர்கிஸ்தான் புறப்பட்டார். கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஷ்கேகில் தொடங்கும் இந்த மாநாட்டில், ரஷ்யா மற்றும் சீன அதிபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். அதே நேரத்தில், இந்த மாநாட்டில் பங்கேற்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை பிரதமர் மோடி சந்தித்து பேசும் திட்டம் எதுவுமில்லை என வெளியுறவுத்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கிர்கிஸ்தானுக்கு பாகிஸ்தான் வான் வழியாக மோடியின் விமானம் செல்ல அனுமதி அளித்த நிலையில், அதை இந்தியா ஏற்க மறுத்து விட்டது. இதனால், ஓமன், ஈரான் நாடுகளின் வான் வழியாக பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார்.