சாலையில் நிறுத்தப்பட்ட வாகனங்களை திருடும் 4 பேர் கைது

புதுச்சேரியில் வாகனங்களை திருடி, கோவையில் விற்பனை செய்து வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2019-06-02 21:44 GMT
புதுச்சேரி சண்முகாபுரத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருபவர்  பெருமாள்.  கடந்த மாதம் 18 ஆம் தேதி, தனது நிறுவனத்தின்  முன் நிறுத்தப்பட்டிருந்த டெம்போ டிராவலர் வாகனத்தை காணவில்லை என அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வாகனத்தை தேடி வந்தனர். இந்த நிலையில்,  வாகனத்தை திருடியது அரியாங்குப்பம் ரமேஷ், அசோக் என்பதைக் கண்டறிந்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது,  டெம்போ டிராவலரை திருடியதை ஒப்புக் கொண்டதுடன்,  உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த விமல் என்பவரிடம் விற்றதாகவும் கூறியுள்ளனர். 

அதனையடுத்து,  வாகனம் மீட்கப்பட்டதுடன்,  போலீஸ் தொடர் விசாரணையில், குற்றவாளிகள் இருவரும் திருப்பூரிலும் கார் திருட்டில் ஈடுபட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. சிறையில் கோயம்புத்தூரைச் சேர்ந்த  பிரபு, விமல் ஆகியோருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. 

ரமேஷும், அசோக்கும் புதுச்சேரியில் வாகனங்களை திருடி கோயம்புத்தூர் எடுத்துச் சென்று பிரபு, விமலிடம் விற்பனை செய்து வந்துள்ளதாக  போலீசார் கூறினர். அதனையடுத்து 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து டெம்போ ட்ராவலர் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவர்களால் கடத்தப்பட்ட வாகனங்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்