தேர்தல் பறக்கும் படை பறிமுதல் நடவடிக்கை : தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் ரூ. 3,500 கோடி பறிமுதல்

நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரையில் 3 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான ரொக்கம், மதுபானங்கள், பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Update: 2019-05-19 21:05 GMT
நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில்,  இதுவரையில் 3 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான ரொக்கம், மதுபானங்கள், பரிசுப்பொருட்கள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய, திலீப் சர்மா , 2014 ஆம் ஆண்டு தேர்தலின்போது ஆயிரத்து 206 கோடி மதிப்பிலான  ரொக்கம், மதுபானங்கள் கைப்பற்றிய நிலையில்,  தற்போது மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாகக்  கூறினார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மார்ச் 10 ஆம் தேதிக்கு பின்னர், தற்போது வரை பறக்கும் படைகள் மூலம் பறிமுதல் செய்யப்பட்டவற்றின் மொத்த மதிப்பு 3 ஆயிரத்து 449 கோடி என்றும் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்