அயோத்தி வழக்கு - உச்சநீதிமன்றத்தில் விசாரணை
அயோத்தி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.
அயோத்தியில் ராமர் கோவில், பாபர் மசூதி தொடர்பான சர்ச்சைக்குரிய இடம் குறித்த வழக்கில், கடந்த மார்ச் 8-ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கலிபுல்லா தலைமையில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் உள்ளிட்ட 3 பேர் கொண்ட சமரச குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இந்த குழு சம்பந்தப்பட்ட அனைத்து பிரிவினரிடம் ஆலோசனை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. இந்த குழுவினர், தங்கள் இடைக்கால அறிக்கையை கடந்த 6ம் தேதியன்று அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் அயோத்தி வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.