சிறுமிகள் பாலியல் வழக்கு மேல்முறையீடு செய்க : புதுச்சேரி அரசுக்கு மாதர் சங்கம் வலியுறுத்தல்
சிறுமிகள் பாலியல் வழக்கில் புதுச்சேரி அரசு மேல்முறையீடு செய்ய வேண்டுமென மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
சிறுமிகள் பாலியல் வழக்கில் புதுச்சேரி அரசு மேல்முறையீடு செய்ய வேண்டுமென மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறையை சேர்ந்த 9 பேர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில், சாட்சிகளை அவர்கள் மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. எனவே புதுச்சேரி அரசு ஒரு வாரத்திற்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று,அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் சுதா தெரிவித்துள்ளார்.