சுதந்திரத்திற்கு பின்னர் காங்கிரஸ் நிலை பற்றி மோடி கிண்டல்

மும்பையில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் சுதந்திரத்துக்கு பின்னர் மிககுறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டினார்.

Update: 2019-04-26 21:18 GMT
மும்பையில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டிய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் சுதந்திரத்துக்கு பின்னர் மிககுறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டினார். அதேபோல, 2019 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் இதுவரை இல்லாத அளவு மிக குறைந்த தொகுதியில் போட்டியிடுவதாக தெரிவித்தார். மும்பை மக்களுக்கும், தமக்கும் இடையிலான பந்தம் பற்றி தெரியாதவர்கள் போடும் கணக்கு, இந்த தேர்தலில் பொய்த்து போகும் என்றும் மறைமுகமாக எதிர்க்கட்சிகளை  மோடி சாடியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்