குஜராத்தில் ஒரே கட்டமாக 26 தொகுதிகளில் வாக்குப்பதிவு
குஜராத்தில் மொத்தமுள்ள 26 மக்களவை தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
குஜராத்தில் மொத்தமுள்ள 26 மக்களவை தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா உள்பட மொத்தம் 370 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சுமார் 4 கோடியே 47 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியான நிலையில், மாநிலம் முழுவதும் 51 ஆயிரத்து 851 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழர்கள் அதிகம் வாழும் மணிநகர் தொகுதியிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக உள்ளது. காலியாக உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்று வரும் இடைத்தேர்தலில் 45 வாக்காளர்கள் களத்தில் உள்ளனர். பா.ஜ.க. சார்பில் 6 பெண் வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் ஒரு பெண் வேட்பாளரும் களத்தில் உள்ளனர். வாக்குப் பதிவையொட்டி குஜராத் மாநில போலீசார் மட்டுமில்லாமல் 150 கம்பெனி துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.