கடன் வழங்கியதில் முறைகேடு : அமலாக்க துறை அலுவலகத்தில் சாந்தா கோச்சார் ஆஜர்
வீடியோகான் குழும நிறுவனங்களுக்கு ஐசிஐசிஐ வங்கி 3 ஆயிரத்து 250 கோடி ரூபாய் கடன் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக மும்பை அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
வீடியோகான் குழும நிறுவனங்களுக்கு ஐசிஐசிஐ வங்கி 3 ஆயிரத்து 250 கோடி ரூபாய் கடன் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக மும்பை அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இது தொடர்பாக ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சாந்தா கோச்சார் வீடுகளில் சோதனை நடைபெற்ற நிலையில், இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சாந்தா கோச்சாருக்கு அது சம்மன் அனுப்பி இருந்தது. இதையடுத்து மும்பை அமலாக்க துறை அலுவலகத்தில் சாந்தா கோச்சார் இன்று ஆஜரானார். அவரிடம் அமலாக்க துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.