பாதுகாப்பு படை - தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச் சூடு
புல்வாமாவில் நீடிக்கும் துப்பாக்கிச் சண்டையால் பரபரப்பு
புல்வாமாவில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே நடைபெற்றுவரும் சண்டையில் ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். புல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் துணை ராணுவத்தினர் 44 பேர் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக அங்கு தீவிரவாதிகள் மீது ராணுவத்தினர் என்கவுன்டர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். புல்வாமா மாவட்டம் பிங்கலான் பகுதியில், அதிகாலை முதல் இருதரப்பினரிடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இதில், மேஜர் ஒருவர் உள்பட ராணுவ தரப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காயமடைந்துள்ளார். இதற்கிடையே, தீவிரவாதிகள் 3 பேர் உயிருடன் பிடிபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன