"வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சிகள் முடங்கியுள்ளன" - மன்மோகன் சிங்
நாட்டில் வேலையின்மை அதிகரித்துள்ளதால் நகர்புற இளைஞர்களிடையே குழப்பம் அதிகரித்து வருவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
நாட்டில் வேலையின்மை அதிகரித்துள்ளதால் நகர்புற இளைஞர்களிடையே குழப்பம் அதிகரித்து வருவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். தொழில்துறை வளர்ச்சியில் பின்தங்கி உள்ளதால், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்ற காரணங்களால் அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் எனவும். அரசின் தவறான நடைமுறையாக தொழில்கள் முடங்கியுள்ளன என்றும், பொருளாதாரத்தை உயர்த்த எந்த திட்டமும் அரசிடம் இல்லை என்றும் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.