"எங்களை பார்த்து அச்சப்படுகிறார், பிரதமர் மோடி" - பிரதமர் மீது மம்தா கடும் விமர்சனம்
சிபிஐ முதல் ரிசர்வ் வங்கி வரை அதிகாரிகள் உங்களை விட்டு விலகுவது ஏன் என பிரதமர் மோடிக்கு, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
சிபிஐ முதல் ரிசர்வ் வங்கி வரை அதிகாரிகள் உங்களை விட்டு விலகுவது ஏன் என பிரதமர் மோடிக்கு, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழலுக்கும், அரசியல் அராஜகத்திற்கும் பெயர் போனவர் பிரதமர் மோடி என அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஒன்றிணைந்து பணியாற்றுவதால் தங்களை பார்த்து மோடி அச்சப்படுவதாகவும், ஆனால் தான் எப்போதும் அச்சப்பட்டதே இல்லை எனவும் மம்தா பானர்ஜி கூறினார்.