சித்தூர் : கொடியேற்றுவதில் மோதல் - 10 பேர் படுகாயம்

சித்தூர் மாவட்டம் குப்பத்தில், ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில், 10 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2019-02-04 10:25 GMT
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதியான குப்பத்தில் இன்று காலை நலத்திட்ட உதவிகள் வழங்க திட்டமிட்டிருந்த தெலுங்கு தேசம் கட்சியினர், தங்களது கட்சிக்கொடியை ஏற்ற முடிவு செய்தனர். இதற்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கவே, அங்கு மோதல் வெடித்தது. இந்த மோதல் சம்பவத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்தி வைத்தனர். தொடர்ந்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்