அமராவதியில் வெங்கடேஸ்வரா சுவாமி கோவில் - பூமி பூஜையுடன் கட்டுமான பணி துவக்கம்
ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் கிருஷ்ணா நதிக்கரை ஓரத்தில் திருமலை வெங்கடேஸ்வரா சுவாமி கோவில் கட்டுவதற்கு திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்திருந்தது.
ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் கிருஷ்ணா நதிக்கரை ஓரத்தில் திருமலை வெங்கடேஸ்வரா சுவாமி கோவில் கட்டுவதற்கு திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்திருந்தது. 25 ஏக்கரில் 150 கோடி ரூபாய் செலவில் கோவில் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அதற்காக பூமி பூஜை போடப்பட்டது. நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு கோவில் கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், இரண்டு ஆண்டுகளுக்குள் கோவில் முழுவதும் கட்டிமுடிக்கப்படும் என்று தெரிவித்தார்.