இந்திய வருவாய் பணி அதிகாரி வீட்டில் ரெய்டு : "தலை சுற்ற வைக்கும்" பறிமுதல்கள்
ராஜஸ்தானில் இந்திய வருவாய் பணி அதிகாரி வீட்டில் ஊழல் தடுப்பு பிரிவினர் நடத்திய ரெய்டில் 2 கோடியே 26 லட்சம் ரூபாய் ரொக்கம், ஏகப்பட்ட நிலம், கடை உள்ளிட்ட சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அங்குள்ள கோட்டாவில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை ஆணையராக பணியாற்றி வரும் மூத்த ஐஆர்எஸ் அதிகாரியான சஹி ராம் மீனா, லஞ்சம் பெறும் போது கையும் களவுமாக பிடிபட்டதை அடுத்து அவருக்கு சொந்தமான இடங்களில் ஊழல் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 2வது நாளாக நடைபெற்ற சோதனையில், 2 கோடியே 26 லட்சம் ரூபாய் ரொக்கம், 82 நிலங்கள் மற்றும் 25 கடைகளுகான பத்திரங்கள், ஒரு வீட்டு பத்திரம், ஒரு பெட்ரோல் பம்ப் ஆவணத்துடன், 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அவருக்கு சொந்தமான பல இடங்களில் சோதனை நடந்து வருவதால் மேலும் பல சொத்து ஆவணங்கள், ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.