ரூ. 2,000 நோட்டுகள் அச்சடிப்பது குறைந்தது...

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Update: 2019-01-04 05:09 GMT
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது தொடர்ச்சியாக குறைக்கப்பட்டு வருகிறது என்றும், தற்போது குறைந்தபட்ச அளவே அச்சடிக்கப்படுகிறது என்றும் நிதியமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர்.   இது புதிய நடவடிக்கை அல்ல என்றும், நோட்டை வெளியிடும் போதே படிப்படியாக அச்சடிப்பதை குறைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டதகாவும் குறிப்பிட்டனர். தற்போது 18 லட்சம் கோடியாக உள்ள பணப்புழக்கத்தில்  2 ஆயிரம்  ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 37 புள்ளி 3 சதவீதமாக உள்ளது.   இது 2017 மார்ச் மாதத்தில் 50 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தது.   பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட போது புழக்கத்தில் இருந்த 500  ரூபாய் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தடை செய்ததுடன் , புதிதாக 2 ஆயிரம்  ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. 
Tags:    

மேலும் செய்திகள்