பண மோசடி - "ஹீரா" நிறுவன தலைவர் நவ்ரா சாகிப் மீண்டும் கைது
ஆந்திர மாநிலம் சித்தூரில், தொழிலதிபர் நவ்ரா சாகிப் கைது செய்யப்பட்டார்.
ஹீரா எனும் பெயரில் தங்க நகை ஏற்றுமதி நிறுவனம், மற்றும் இஸ்லாமிய பெண்கள் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி வரும் நவ்ரா சாகிப், மீது சட்டவிரோதமாக சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு திரட்டியதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் முதலீட்டாளர்களுக்கு கடந்த ஓராண்டாக லாபத் தொகையில் பங்கு தரவில்லை என, ஆந்திரா,தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த முதலீட்டாளர்களும், வெளிநாடுகளில் இருந்து முதலீடு செய்தவர்களும் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, கடந்த ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் திருப்பதி கலகடா போலீசில் அளிக்கப்பட்ட மோசடி புகார் காரணமாக, ஆந்திரா போலீஸார் அவரை மீண்டும் கைது செய்தனர்.