பிளிப்கார்ட் விற்பனையால் ஆதாயம் : ரூ.699 கோடி வரி செலுத்திய சச்சின் பன்சால்

பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத உரிமையை அமெரிக்காவில் வால்மார்ட் நிறுவனத்துக்கு விற்பனை செய்ததால் கிடைத்த ஆதாயத்துக்காக, அதன் நிறுவனர்களில் ஒருவரான சச்சின் பன்சால் 699 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தியுள்ளார்.

Update: 2019-01-02 13:01 GMT
பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத உரிமையை அமெரிக்காவில் வால்மார்ட் நிறுவனத்துக்கு விற்பனை செய்ததால் கிடைத்த ஆதாயத்துக்காக, அதன் நிறுவனர்களில் ஒருவரான சச்சின் பன்சால் 699 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தியுள்ளார். பிளிப்கார்ட்டை விற்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதும், இதற்கான வருமான வரியை செலுத்துமாறும் வருமான வரித்துறை சார்பில் சச்சின் பன்சால், பின்னி  பன்சால் மற்றும் வால்மார்ட் நிறுவனத்துக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து  வால்மார்ட் நிறுவனம் முதல்கட்டமாக 7 ஆயிரத்து 439 கோடி ரூபாயை வரியாக முன்கூட்டியே செலுத்தியுள்ளது. அதேசமயம் பிளிப்கார்ட் நிறுவனத்தின் மற்றொரு நிறுவனரான பின்னி பன்சால் எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்