பிரதமர் மோடியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு
3 - வது அணிக்கு ஆதரவு திரட்டி வரும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், புதுடெல்லியில், பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தார்.
3 - வது அணிக்கு ஆதரவு திரட்டி வரும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், புதுடெல்லியில், பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தார். இந்த சந்திப்பு, மரியாதை நிமித்தமானது என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம், தெலங்கானா மாநிலம் தொடர்பான விவகாரங்கள் குறித்து, பிரதமர் மோடியுடன் சந்திரசேகர ராவ் விவாதித்ததாக தெலங்கானா ராஷ்டீரிய சமிதி தலைவர்கள் குறிப்பிட்டனர். தேசிய தலைவர்களை அடுத்தடுத்து சந்தித்து வரும் சந்திரசேகரராவ், தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தியிருப்பது, தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.