கணினிகளை கண்காணிக்கும் முடிவுக்கு எதிர்ப்பு - தடை விதிக்க உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும் கண்காணிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-12-24 10:49 GMT
நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும் கண்காணிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்  செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தொடர்ந்துள்ள இந்த பொது நல வழக்கில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் முடிவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். 

நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும் கண்காணிப்பதற்கு சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட 10 அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கப்படும் என கடந்த வெள்ளிக்கிழமை உள்துறை அமைச்சகம் அறிவித்த நிலையில், பல்வேறு தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், இதற்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே, ரபேல் ஒப்பந்தம் குறித்து விசாரிக்குமாறு வழக்கு தொடர்ந்ததும் இவர் தான் என்பதும், அதை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்