விழா மேடையில், மயங்கிய மத்திய அமைச்சர் - வேளாண் பட்டமளிப்பு விழாவில் பரபரப்பு
மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மேடையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவியது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மேடையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவியது. நாக்பூர் அருகே அகமத் நகரில் வேளாண் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நிதின் கட்கரி பங்கேற்றார். தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது தீடிரென அவர் மயங்கி சரிந்தார். அவரை அருகில் உள்ளவர்கள் தாங்கி பிடித்தனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிதின் கட்கரி, விழா அரங்கில் அதிக வெப்பம் இருந்ததாகவும், எனவே தான் மயக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். தனக்கு சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தம் சீராக உள்ளதாகவும் அவர் கூறினார். சர்க்கரை அளவு குறைந்ததால் கட்கரிக்கும் மயக்கம் ஏற்பட்டதாக முதலில் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.