"மேகதாது பகுதியில் டிச.7ல் நேரில் ஆய்வு" - கர்நாடக அமைச்சர் சிவகுமார் தகவல்
மேகதாது அணைக்கான திட்ட வரைவு அறிக்கையை தயார் செய்வது தொடர்பாக நிபுணர் குழுவுடன் வருகின்ற 7ம்தேதி மேகதாதுவில் அணை கட்டும் பகுதி மற்றும் நீர்தேக்க பகுதிகளை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளதாக கர்நாடக அமைச்சர் வி கே சிவகுமார் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணைக்கான திட்ட வரைவு அறிக்கையை தயார் செய்வது தொடர்பாக நிபுணர் குழுவுடன் வருகின்ற 7ம்தேதி மேகதாதுவில் அணை கட்டும் பகுதி மற்றும் நீர்தேக்க பகுதிகளை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளதாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் வி கே சிவகுமார் தெரிவித்துள்ளார். பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அணைக்கான திட்ட வரைவு அறிக்கையை விரைந்து தயார் செய்து அனுப்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், முதற்கட்டமாக அமைச்சர் என்ற முறையில் அதிகாரிகளுடன் அணைக்கட்டு பகுதியை ஆய்வு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.