வங்கியில் மோசடி விவகாரம் : "நாடு திரும்பினால் கொன்று விடுவார்கள்" - நீதிமன்றத்தில் நீரவ் மோடி வழக்கறிஞர் தகவல்
"தன்னை கொன்று விடுவார்கள் என்பதால் நாடு திரும்ப மாட்டேன்" என நீதிமன்றத்தில் வைர வியாபாரி நீரவ் மோடி தெரிவித்துள்ளார்.
"தன்னை கொன்று விடுவார்கள் என்பதால் நாடு திரும்ப மாட்டேன்" என நீதிமன்றத்தில் வைர வியாபாரி நீரவ் மோடி தெரிவித்துள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீரவ் மோடி மீது, சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. அவர் எந்த நாட்டில் தங்கியுள்ளார் என்பது குறித்து கண்டுபிடிக்க முடியாத நிலையில், அவர் மீதான வழக்கு மும்பையில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் வழக்கு விசாரணையின்போது ஆஜரான நீரவ் மோடியின் வழக்கறிஞர், அவர் நாடு திரும்பினால் அவரை கொன்று விடுவார்கள் என்பதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளதாகவும், பாதுகாப்பு காரணம் கருதி அவர் நாடு திரும்ப விரும்பவில்லை எனவும் வாதிட்டு இருப்பது, அவர் மீதான வழக்கில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.