"பாகிஸ்தான் செல்லுமாறு ராகுல் காந்தி கூறவில்லை" - பஞ்சாப் மாநில அமைச்சர் சித்து திடீர் மறுப்பு
பாகிஸ்தான் விழாவுக்கு செல்லுமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறவில்லை என பஞ்சாப் அமைச்சரும், கிரிக்கெட் வீரருமான சித்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் விழாவுக்கு செல்லுமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறவில்லை என பஞ்சாப் அமைச்சரும், கிரிக்கெட் வீரருமான சித்து தெரிவித்துள்ளார். அண்மையில் கர்தாப்பூர் வழித்தடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்காக சித்து பாகிஸ்தான் சென்றார். ராகுல் காந்தி தான் தம்மை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தார் என சித்து தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. இதனை மறுத்துள்ள சித்து, பிரதமர் இம்ரான் கானின் தனிப்பட்ட அழைப்பின் பேரில் பாகிஸ்தான் சென்றது அனைவரும் நன்கு அறிவார்கள் என தெரிவித்துள்ளார்.