சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு : 88 பேரின் தண்டனை உறுதி செய்து நீதிமன்றம் உத்தரவு
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் 88 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் 88 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த 1984 -ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. டெல்லியில் நடைபெற்ற கலவரத்தில் 95 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பான வழக்கில் 88 பேருக்கு 5 ஆண்டு தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், 88 பேரின் தண்டனையை உறுதி செய்துள்ளது.