அயோத்தி விவகாரம் - நீதித்துறையை காங். மிரட்டுகிறது - பிரதமர் மோடி

அயோத்தி விவகாரத்தில், நீதித்துறைக்கு காங்கிரஸ் கட்சி மறைமுக மிரட்டல் விடுப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2018-11-25 17:36 GMT
அயோத்தி விவகாரத்தில், நீதித்துறைக்கு காங்கிரஸ் கட்சி மறைமுக மிரட்டல் விடுப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம், ஆல்வாரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், தேர்தல் காரணமாக  அயோத்தி வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கறிஞர் கூறி வருவதாகவும், அவர்களின் கோரிக்கைகளை ஏற்காவிட்டால், தகுதிநீக்க தீர்மானத்தை வைத்து நீதிபதிகளை மறைமுகமாக அச்சுறுத்துவதாகவும் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் இந்த புதிய அரசியல் விளையாட்டை, தான் ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்