"இளைஞர்கள் மிகப்பெரிய இலக்குகளை கொண்டுள்ளனர்" - பிரதமர் மோடி பேச்சு
"மன் கி பாத்" நிகழ்ச்சியின் 50வது பகுதியில் பேசிய பிரதமர் மோடி, இன்றைய இளைஞர்கள் மிகப் பெரிய இலக்குகளையும், திட்டங்களையும் கொண்டு செயல்படுவதாக குறிப்பிட்டார்.
அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றிய மோடி, இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டபோது, இதில் அரசியல் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்ததாகத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சி மூலம் மக்களிடம் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். சமூக வலைதளங்கள் வாயிலாக, இளைஞர்களுடன் பேசுவதில் முயற்சி கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட மோடி, இன்றைய இளைஞர்கள் பெரிய இலக்குகளையும், திட்டங்களையும் கொண்டிருப்பது நல்ல விஷயம் என்றார்.
1949ஆம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி நமது அரசியல் சாசனம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், அந்த நாள், நாளை கொண்டாட இருப்பதாகவும் அவர் கூறினார். உரிமை மற்றும் கடமை குறித்து தெளிவாகக் கூறப்பட்டிருப்பது, நமது அரசியலமைப்பு சட்டத்தின் தனித்துவம் என்று கூறிய மோடி, இந்த இரண்டுக்கும் இடையிலான நமது செயல்பாடு, தேசத்தை முன்னெடுத்து செல்லும் என்றார்.