ஸ்கேட்டிங் செய்து பெண் குழந்தைகளின் கல்விக்காக 9 கோடி நிதி திரட்டிய ஆந்திர தொழிலதிபர்
ஆந்திராவை சேர்ந்த ரானா உப்பாளப்பட்டி என்ற தொழிலதிபர் 25,000 பெண் குழந்தைகளின் கல்விக்காக நிதி திரட்டும் பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆந்திராவை சேர்ந்த ரானா உப்பாளப்பட்டி என்ற தொழிலதிபர் 25,000 பெண் குழந்தைகளின் கல்விக்காக நிதி திரட்டும் பயணத்தில் ஈடுபட்டுள்ளார். செப்டம்பர் 5 ஆம் தேதி ஒசூரில் இருந்து தனது பயணத்தை தொடங்கிய அவர், 6000 கிலோ மீட்டர் ஸ்கேட்டிங் செய்து 9 கோடி நிதி திரட்டவுள்ளார்.11 மாநிலங்களில் பயணித்து திரும்பிய அவர், நேற்று தனது சொந்த ஊரான விசாகப்பட்டினத்திற்கு வந்தடைந்தார்.