விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது, ஜி.எஸ்.எல்.வி : ஜி- சாட் 20 விண்ணில் நிலை நிறுத்தி, சாதனை

விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது, ஜி.எஸ்.எல்.வி : ஜி- சாட் 20 விண்ணில் நிலை நிறுத்தி, சாதனை

Update: 2018-11-14 12:53 GMT
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சார்பில், அதி நவீன
தகவல் தொடர்பு சேவைக்காக ஜி- சாட் 29 செயற்கைக்கோள், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து, மாலை 5.08 மணிக்கு விண்ணில் சீறிப்பாய்ந்தது. உயர் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு உள்ள ஜி- சாட் 29 செயற்கைக்கோள் திட்டமிட்டபடி, புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. அப்போது, தரை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்துக்கொண்டிருந்த விஞ்ஞானிகள், ஒருவருக்கொருவர் கைகுலுக்கி, தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.  400 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு உள்ள ஜி- சாட் 29 செயற்கைக்கோள், குக்கிராமங்களையும் உள்ளடக்கி, நாடு முழுவதும் அதி நவீன தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்த  முக்கிய பங்காற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்