திருப்பதியில் நாளை முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை

திருப்பதியில் நாளை முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-10-31 13:00 GMT
திருமலையில் நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவதால் பிஸாஸ்டிக் குப்பைகள் அதிகமாக குவிந்து வருகின்றன. எனவே, சுற்றுச்சூழலை காக்கும் விதமாக, திருமலையில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறுபவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்