வருமான வரி செலுத்தும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வருமான வரி செலுத்தும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68 சதவீதம் அதிகரித்துள்ளது.

Update: 2018-10-23 20:44 GMT
* வருமான வரி செலுத்தும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68 சதவீதம் அதிகரித்துள்ளது.

* 2014-15ஆம் ஆண்டில், 48 ஆயிரத்து 416 நபர்கள் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் காட்டியிருந்தார்கள்.

* 2017-18ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 81 ஆயிரத்து 344 ஆக அதிகரித்துள்ளது.

* ரூபாய் நோட்டு நடவடிக்கைகளின் விளைவாக இதுவரை ஒழுங்காக
கணக்கு காட்டாதவர்கள் பலரும், தற்போது வருமான வரி கணக்குகளை சமர்பிக்க துவங்கியிருக்கிறார்கள் என்று கருதப்படுகிறது.  

* வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்தவர்கள் அனைவரின் மொத்த வருமானம் 2013-14இல் 26.92 லட்சம் கோடி ருபாயாக இருந்தது. இது 2017-18இல் 44.88 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

* ஜி.டி.பி எனப்படும் நாட்டின் மொத்த உற்பத்தியில் நேரடி வருமானத்தின் பங்கு 5.98 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இது தான் மிக அதிகபட்ச விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்