மொபைல் சிம் கார்டு பெற புதிய டிஜிட்டல் முறை
டெலிகாம் சேவைக்கு ஆதார் கார்டை இணைக்க வேண்டியது இல்லை என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்ததை தொடர்ந்து, மொபைல் சிம் கார்டுகளை வழங்க புதிய டிஜிட்டல் முறையை மத்திய அரசு கையாள உள்ளது.
டெலிகாம் சேவைக்கு ஆதார் கார்டை இணைக்க வேண்டியது இல்லை என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்ததை தொடர்ந்து, மொபைல் சிம் கார்டுகளை வழங்க புதிய டிஜிட்டல் முறையை மத்திய அரசு கையாள உள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மொபைல் ஆப்பின் மூலம் எளிதில் சிம் கார்டுகளை பெற திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆப் பின் மூலம் நேரடி புகைப்படம் மற்றும் அடையாள அட்டைகளின் புகைப்படம் பெறப்பட்டு, மொபைலுக்கு வரும் ஒடிபி எண் சரிபார்க்கபட்டவுடன் சிம் கார்டு செயல்பட தொடங்கிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.