சபரிமலை விவகாரம் : ஏராளமான பெண்கள் திரண்டு ஆர்ப்பாட்டம்
சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்கும், உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்
சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்கும், உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கேரள மாநிலம் கொச்சியில், சிவசேனா சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அப்போது, சபரிமலையை பாதுகாக்கவும், கோயிலின் புனிதத்தையும், பாரம்பரியத்தையும் பாதுகாக்கவும் வலியுறுத்தி, முழக்கங்களை எழுப்பினர். இதில் பேசிய சிவசேனாவை சேர்ந்த பெரிங்கமலா அஜி என்பவர், தங்கள் கட்சியைச் சேர்ந்த தற்கொலைப்படை பெண்கள், வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் பம்பை நதி பகுதியில் கூடுவார்கள் என்றும், இளம்பெண்கள் யாராவது சபரிமலை செல்ல முயன்றால் அங்கு கூடி இருக்கும் தங்கள் கட்சி பெண்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் என்றும் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு நிலவுகிறது.