இந்தியா -ரஷியா இடையே ரூ. 70 ஆயிரம் கோடி ஒப்பந்தம்
அமெரிக்காவின் மிரட்டலையும் மீறி, இந்தியா - ரஷியா இடையே ராணுவம், விண்வெளி துறைகள் உள்பட சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
அமெரிக்காவின் மிரட்டலையும் மீறி, இந்தியா - ரஷியா இடையே, ராணுவம், விண்வெளி துறைகள் உள்பட சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான
ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. புதுடெல்லியில், பிரதமர் நரேந்திரமோடி, ரஷிய அதிபர் விளாடிமீர் புதின் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பாக, எஸ் - 400 எனும் ஏவுகணைகள் , போர் கப்பல்கள் வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஒப்பந்தங்களுக்குப்பின் இரு தலைவர்களும் கூட்டறிக்கை வெளியிட்டனர். இதனிடையே, விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்ப, ரஷியா உதவி புரியும் என்று அந்நாட்டு அதிபர் விளாடிமீர் புதின் உறுதி அளித்துள்ளார்.