இரண்டு கால்கள் இல்லாமல் நடனம் ஆடும் சிறுவன்
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இரண்டு கால்களையும் இழந்த ஒரு சிறுவன், ஒரு பள்ளியில் நடைபெற்ற நடன போட்டியில் கலந்து கொண்டு நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்துள்ளான்
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இரண்டு கால்களையும் இழந்த ஒரு சிறுவன், ஒரு பள்ளியில் நடைபெற்ற நடன போட்டியில் கலந்து கொண்டு நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்துள்ளான். விஜய் என்ற அந்த சிறுவன் உடலில் ஏற்பட்ட நோயின் காரணமாக தனது இரண்டு கால்களையும் இழந்தார். ஆனாலும் அவர் தனது தன்னம்பிக்கையை கைவிடாமல் தொடர்ந்து பல்வேறு நடன போட்டிகளில் பங்கேற்று வருகிறார். லுதியானாவில் வருகிற 7 ம் தேதி நடைபெற உள்ள இறுதிபோட்டியில் கலந்து கொள்ள உள்ளார்.