மேகதாது அணைக்கு சாத்தியக்கூறு அறிக்கை - விரைவில் ஒப்புதல் அளிக்குமாறு கர்நாடக முதலமைச்சர் கடிதம்

மேகதாது அணைக்கான சாத்தியக்கூறு அறிக்கைக்கு விரைவில் ஒப்புதல் அளிக்குமாறு மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்துக்கு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2018-10-04 00:00 GMT
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அரைமனதுடன் செயல்படுத்தி வரும் கர்நாடக அரசு, மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்துவதில் மும்முரம் காட்டி வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் கர்நாடக அரசு மேகதாது அணைக்கான சாத்தியக்கூறு அறிக்கையை தயார் செய்து மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்திற்கு அனுப்பி இருந்தது. இந்நிலையில், அந்த அறிக்கைக்கு விரைவில் ஒப்புதல் அளிக்குமாறு மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்துக்கு, குமாரசாமி  இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.    
Tags:    

மேலும் செய்திகள்