கேரள கன்னியாஸ்திரி பலாத்கார புகார் - சகோதரி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு...

கேரளாவில் கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த‌தாக கூறப்படும் புகாரில் ஆயரை கைது செய்யாத‌தால், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் சகோதரி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார்.

Update: 2018-09-16 23:52 GMT
கேரள மாநிலம் கோட்டயம் அருகே குருவிலங்காட்டை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறைமாவட்ட ஆயராக இருந்த பிராங்கோ பாலியல் பலாத்காரம் செய்த‌தாக குற்றச்சாட்டு எழுந்த‌து. இதுகுறித்து, 2 மாதங்களுக்கு முன்பே வழக்கு பதிவு செய்தும் இதுவரை அவரை கைது செய்யவில்லை என சக கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் சகோதரி கொச்சியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார். இதனிடையே குற்றம் சாட்டப்பட்டுள்ள பாதிரியார் பிராங்கோ நாளை மறுநாள் விசாரணைக்காக ஆஜராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்