ஐதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு வழக்கில் 2 பேருக்கு தூக்கு : சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

44 பேர் உயிரை பறித்த ஐதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு வழக்கில் இந்தியன் முஜாஹிதின் பயங்கரவாதிகள் அனீக் ஷாபீக் மற்றும் இஸ்மாயில் சவுத்திரி ஆகிய இருவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2018-09-10 14:27 GMT
44 பேர் உயிரை பறித்த ஐதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு வழக்கில் இந்தியன் முஜாஹிதின் பயங்கரவாதிகள் அனீக் ஷாபீக் மற்றும் இஸ்மாயில் சவுத்திரி ஆகிய இருவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. 2007 ம் ஆண்டு ஆகஸ்டு 25 ம் தேதி,  ஐதரபாத்தின் கோகுல் சாட் உணவகம் மற்றும் லும்பினி பார்க் பகுதியில் உள்ள திறந்த வெளி திரையரங்கு ஆகிய இரு இடங்களில் பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த வழக்கில், இந்தியன் முஜாஹீதின் தீவிரவாதிகள் 5 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அண்மையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்திருந்த , சிறப்பு நீதிமன்றம், 3 பேரை விடுதலை செய்து, 2 பேர் மட்டும் குற்றவாளிகள் என அறிவித்திருந்தது. இவர்களுக்கான தண்டனை விவரங்களை வெளியிட்ட நீதிபதி, 2 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்